மனிதனை கொன்று சாப்பிட்ட ஓவியர்..!!

வெனிசியூலாவைச் சேர்ந்த லுயிஸ் அல்பிரட் என்னும் மனிதன் பண்ணை உரிமையாளர் ஒருவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டபோது அவரது வேண்டுகோளின்படிதான் அவரைத் தான் கொன்றதாகக் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பண்ணை உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் அவரைக் கொன்றதாகவும், சடங்கின் ஒரு பகுதியாகத்தான் அதைச் செய்ததாகவும் லுயிஸ் அல்பிரட் கூறியுள்ளான்.
அந்த மனிதனின் உடலின் பெரும்பகுதியைத் தின்று விட்ட லுயிஸ், அந்த மனிதனின் இரத்தம் மற்றும் சாம்பலைப் பயன்படுத்தி அவர் கேட்டுக்கொண்டது போலவே படங்கள் வரைந்ததாகவும் தெரிவித்துள்ளான்.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள படங்கள் இரத்தம் மற்றும் சாம்பலால் வரையப்பட்டனவா என்று தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். லுயிஸை பொலிசார் “நர மாமிசம் தின்னும் ஓவியர்” என்று அழைக்கின்றனர்.