;
Athirady Tamil News

86 குண்டுகளை உடம்பில் வாங்கி மரணித்த யானை… இந்த உண்மை சம்பவம் எங்கு தெரியுமா?..!!

0

யானை குறித்து ஒரு பிரம்மாண்டம் நம் எல்லாருடைய மனதிலும் ஓர் எண்ணம் இருக்கும். பார்க்க பெரிய உருவமாக இருப்பதால் மட்டுமல்ல அதன் குழந்தைத் தனமான குணத்தாலும், சில நேரங்களில் மதம் பிடித்துவிட்ட காரணத்தால் கண்ணில் படுவதை எல்லாம் வீழ்த்திடும் ஆக்ரோசமான குணத்தாலும் யானை என்றாலே அது குறித்த ஒர் அச்சம் நம் மனதில் எழும்.

அதுவும் யானையின் தந்தங்களுக்காக,முடிக்காக என நம்முடைய வசதிக்காக நம்மையும் தாண்டிய வலிமையான சக்தியைக் கொண்ட யானையை கொன்று புதைப்பது என்பது அதிகரித்து வருகிறது. நம்முடைய சுயநலத்திற்காக ஒர் விலங்கினமே அழியும் வரை கொன்று குவிப்பது இருக்கிற ஒன்று இரண்டு யானைகளையும் நமக்கு கட்டுப்படுத்தி அடிமைபடுத்தி வைத்திருப்பது எவ்வளவு குரூரமான எண்ணம்?

இன்றைக்கு மொபைல் கேட்ஜெட்ஸ் எல்லாம் வந்துவிட்ட பிறகு சர்கஸ் குறித்த வரவேற்பு பெருமளவு குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். மக்களின் ஆர்வமின்மையால் சர்க்கசை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு பிழைப்புக்காக வேறு வேலை தேடிக் கொண்டு போய்விட்டார்கள். இங்கே டைக் என்ற யானையைப் பற்றிய கலங்கவைக்கிற கதையைத் தான் பார்க்கப்போகிறீர்கள்.

டைக் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் அது பிறந்த இடத்தையும் அதன் பிறகு இடமாற்றப்பட்ட அது வாழ்ந்த இடம் மற்றும் அதன் சூழல் குறித்து அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். டைக் ஆப்பிரிகாவைச் சேர்ந்த புஷ் எனப்படுகிற ஒரு வகை யானை. இது மொசம்பிக்யூவில் பிறந்தது

இந்த புஷ் யானைகள் எப்போதும் மிகப்பெரிய உருவ அமைப்பினை கொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் காட்டு யானையை விட பெரிதான தோற்றத்தில் இந்த யானை இருக்கும். இப்படிப்பட்ட யானை குணத்திலும் தனக்கே உரிய தனிச்சிறப்புடன் இருந்திருக்கிறது

வழக்கம் போல யானைகள் வாழும் பகுதிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நகரமயமாக்கல் என்ற பெயரில் சுரண்டப்பட்டது. யானைகளின் வாழ்விடம் சுருங்கிப் போவது, அதே நேரத்தில் கண்மூடித்தனமாக யானைகளை வேட்டையாடுவது ஆகியவற்றால் யானை இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வந்தது.

இன்னும் ஒரு சில யானைகளே இருக்கிறது என்ற நிலை வந்தவுடன் தான் நமக்கு சுயநினைவே வருகிறது. உடனே அந்த ஒரு யானையையும் பிடித்து வந்து ஒர் காட்சிப் பொருளாக வைத்துவிடுகிறோம்.தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த டைக் ஹவாய் தீவில் இருக்கிற ஒரு சர்க்கஸ் கூட்டத்தின் கைகளில் சிக்குகிறது.

>அமெரிக்காவின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 3700 கிலோமிட்டர் தொலைவு பசிபிக் கடலின் வடக்குப்பக்கமாக அமைந்திருக்ககூடிய தீவு தான் இந்த ஹவாய் தீவு. இந்த தீவு ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக 1959 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது. இதன் தலைநகர் ஹோனோலுலுவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சர்வதேச சர்க்கஸ் நிறுவனத்தில் டைக் ஒப்படைக்கப்பட்டது.

தன் கூட்டத்தினருடன் அலைந்து திரிந்து வாழ்ந்த யானை கூண்டிற்குள் அகப்பட்டு கிடக்க பெரும் போராட்டங்களை சந்தித்தது. தன் இயல்பை முற்றிலுமாக சீர் குலைக்கிற இந்த சர்க்கஸ் கூடாராம் டைக்கிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவ்வப்போது தன் ஆக்ரோஷத்தை பதிவு செய்து கொண்டேயிருந்தது டைக். பல முறை ஆக்ரோஷமாக சீறினாலும் மூன்று முறை டைக் சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்றாவது முறை, ஆகஸ்ட் 20,1994 ஆம் ஆண்டு ஆக்ரோசமாகி தான் அடைக்கப்பட்டிருந்த சர்க்கஸ் கூண்டிலிருந்து வெளியேறியது டைக் .

1993 ஆம் ஆண்டு ஏப்ரல்21 ஆம் தேதி, பென்சல்வேனியாவில் இருக்கிற ஒர் இடத்தில் சர்க்கஸ் காட்சிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டைக் கூடாரத்தை கிழித்துக் கொண்டு வெளியேறியது. அதே நாளில் விலங்கு காப்பாளர் ஒருவரையும் தாக்கியது. இதனால் அந்த சர்க்கஸ் நிறுவனத்திற்கு அப்போது பதினான்காயிரம் டாலர் வரை சேதம் உண்டானது.

முதல் சம்பவத்தை தொடர்ந்து டைக்கிற்கு இன்னும் கெடுக்குப்பிடி அதிகமானது, இதனால் மேலும் உக்கிரமடைந்திருந்தது டைக் அடுத்த மூன்றே மாதங்களில் 1993 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி டகோடாவின் வடக்குப் பகுதியில் சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த போது கூட்டத்தைப் பார்த்து மிரண்ட டைக் சர்க்கஸ் கூடாரத்திலிருந்து வெளியேறி கட்டுப்பாடில்லாமல் ஓடத் துவங்கியது.சுமார் அரை மணி நேர போட்டத்திற்கு பிறகு டைக் பிடிக்கப்பட்டது.

இப்படி ஒவ்வொரு முறையும் தனக்கு எள்ளளவும் தொடர்பில்லாத இந்த சர்க்கஸ் கூடாரத்திலிருந்து வெளியேறி தன் மக்களுடன் பழைய வாழ்க்கை திரும்பிட வேண்டும் என்றே நினைத்திருந்தது டைக்.ஒவ்வொரு முறையும் டைக் கூடாரத்தை விட்டு வெளியேற முயற்சிப்பது என்பது இந்த இரண்டு சம்பவங்களுக்கு பிறகு சாதரணமானது அல்ல. டைக்கிற்கு பயங்கர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.டைக்கிற்கான பாதுகாவலர்கள் அதிகரிக்கப்பட்டார்கள். அடைக்கப்பட்டிற்கும் கூண்டை விட்டு வெளியே அழைத்துவரப்படும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டது.

யாருமே எதிர்ப்பார்க்காத அந்த நாளும் வந்தது இந்த சித்தரவதை கூடத்தை விட்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த டைக்கிற்கு ஆகஸ்ட் 20,1994 ஆம் ஆண்டு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. இதையும் தானாக செய்யவில்லை தன் கட்டுப்பாட்டை இழந்து எல்லை மீறி இதற்கு மேலும் பொருத்திருக்க முடியாது என பொங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆகஸ்ட் 20 ஆம் தேதி கூண்டிலிருந்து விடுவித்து அழைத்து வரப்படும் போது சத்தமாக பிளிறியது

யானை சர்க்கஸ் நடக்கும் இடத்திற்கு செல்லாமல் மக்கள் உட்கார்ந்திருக்கும் பக்கம் வந்தது. அதுவரை அங்கு உட்கார்ந்திருந்த மக்கள் யானை டம்மி என்றே நினைத்திருந்தார்கள். ஆனால் அந்த நினைப்பு சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த தன் மாவூத்தை(யானையின் பயிற்றுனர்) தும்பிக்கையால் தூக்கிப் போட்டு மிதித்துக் கொன்றது. கூடாரத்தை விட்டு வெளியேறி சாலையில் ஓட ஆரம்பித்துவிட்டது டைக்.

வானுயர்ந்த மரங்களுடன் உலா வந்தத யானை பின் கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இந்த சர்க்கஸ் நடக்கும் இடத்தில் கூண்டிற்குள் அடைக்கப்பட்டது. இதன் பிறகு டைக் வெளியுலகத்தை பார்த்ததேயில்லை. ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியேறிய டைக்கிற்கு எங்கு செல்வதென்றே தெரியவில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் தார்ச்சாலைகள் தான் தெரிந்தது. திக்கு தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது. எங்காவது தன் கூட்டத்தினர் தெரியமாட்டார்களா, அங்கே செல்லக்கூடிய வழி தெரியாதா என்ற ஏக்கத்தில் கண்ணில் படுவதை எல்லாம் முட்டியது.

யானைக்கு மதம் பிடித்துவிட்டது. இனியும் தாமதித்தால் மனித உயிர்கள் பல பலியாகக்கூடும் என்று அஞ்சிய சர்க்கஸ் பொறுப்பாளர் போலீஸுக்கு தகவல் சொல்கிறார். போலீஸும் வருகிறது, யானை ஏற்படுத்திச் சென்ற சேதங்களை எல்லாம் பார்க்கிறார்கள். யானை சுட்டுத் தான் பிடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். குறுகிய சாலை அதன் இரண்டு ஓரங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இது போலீஸுக்கு வசதியாய் அமைந்துவிட்டது. வாகனங்களில் இடுக்குகளில் ஒளிந்து கொண்டு டைக்கை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த என்கவுண்டர் இது. சிலர் அதிர்ச்சியுடன் செய்வதறியாது பார்க்க சிலர் கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டார்கள். தங்களையும் அறியாமல் சிலர் டைக்கிற்காக கண்ணீர் சிந்தவும் செய்தார்கள். தொடர்ந்து இருபது குண்டுகள் துளைக்கப்பட்டிருந்தன. டைக்கின் வேகம் குறைந்தது. இனி அப்படியே மயங்கி விழுந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி டைக் மீண்டும் இங்கிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடத்துவங்கியது.

நாலாபுறங்களிலிருந்தும் சரமாரியாக துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் பாயந்தன. கிட்டத்தட்ட 86 குண்டு உடலை துளைத்திருந்தது. அப்போதும் சிறிது தூரம் நடந்து சென்ற டைக் அப்படியே சுருண்டு விழுந்து இறந்தது.3600 எடை கொண்ட டைக் ரத்தம் தொய்ந்த நிலையில் தன் உயிரைக் காப்பாற்ற தன் இறுதி மூச்சு வரையிலும் போராடி சுயநலக்காரர்கள் மத்தியில் சுருண்டு விழுந்தது. மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த சம்பவம் உலக நாடுகளை எல்லாம் இங்கே திரும்பி பார்க்க வைத்தது. விலங்குகள் நல வாரியங்கள் விழித்துக் கொண்டன.

டைக்கிற்கு பிரதே பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யானைக்கு குண்டு துளைப்பதற்கு முன்னாலேயே ஏகப்பட்ட உள் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக மார்பு பகுதி எலும்பில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதோடு டைக்கின் ரத்தத்தில் கொகைன் போதைப்பொருள் மற்றும் மது கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இரண்டு முறை கூடாரத்தை விட்டு வெளியேறிய டைக் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படுத்தாமல் இருக்க அதனை எப்போதும் பாதி மயக்கத்திலேயே வைத்திருக்க கடுமையாக தாக்கி துன்புறுத்தியிருக்கிறார்கள். அதோடு போதைப் பொருளையும் கொடுத்திருக்கிறார்கள். அதில் தன் வலுவிழந்த டைக் அவர்கள் சொன்னதைக் கேட்டு நடந்து வந்திருக்கிறது

மேரி

இதே போல ஒரு சம்பவம் கிங்க்ஸ்போர்ட் என்னுமிடத்தில் நடைப்பெற்றது. அதாவது அங்கேயிருந்த சர்க்கஸ் கம்பெனியில் மேரி என்ற யானை இருந்திருக்கிறது. ஒரு நாள் மேரியை குளிப்பாட்ட அதன் பயிற்றுனர் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது வழியில் பழக்கடையை பார்க்கவே மேரியின் கவனம் திசை மாறி பழக்கடையை நோக்கிச் சென்றிருக்கிறது. அதனை தன் கையிலிருந்து கூர்மையான ஆயுதத்தால் கட்டுப்படுத்த நினைத்த பாகனை மிதித்து கொன்றது மேரி.

தூக்கு

மறுநாள் இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது அதில் மேரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. யானைக்கு எப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றுவது என ஏகப்பட்ட குழப்பங்கள். முடிவாக ஒரு கிரேன் கொண்டு வந்து நிறுத்தி அதில் மேரியை தூக்கிலிட்டார்கள். ஒரு விலங்கு தன் வாழ்விடத்தை,இயல்பை முற்றிலுமாக ஒழித்து நமக்கு தோதாகவும் நம் விருப்பப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று அர்த்தமற்ற பேராசைபடுபவர்கள் டைக்கையும் மேரியையும் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*