;
Athirady Tamil News

பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற காரில் ஹெரோய்ன்..!!

0

தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் ஊடாக பொலிஸாரின் கட்டளையை மீறி மாத்தறை நோக்கி சென்ற கார் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதிவேக வீதியின் 6.9R என்ற இடத்தில் அந்தக் கார் கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது காரில் இருந்து ஹெரோய்ன் போதைப் பொருள் அடங்கிய பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

56 கிராமும் 100 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் காரில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக கார் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − 3 =

*