;
Athirady Tamil News

திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­க­ளுக்கு முடிவு கட்­டு­வது மிக அவ­சி­யம்..!!

0

தமி­ழர்­கள் ஆண்ட நிலங்­க­ளைத் தமி­ழர்­கள்­தான் ஆள­வேண்­டும். இனங்­க­ளுக்­கி­டை­யில் மோதல்­களை உரு­வாக்­கிக்­கொண்­டி­ருக்­கும் தென்­னி­லங்கை இன­வா­தி­க­ளின் எண்­ணங்­கள் சிதைக்­கப்­ப­ட­ வேண்­டும். உண்­மை­யான நல்­லாட்­சி­யாக இருந்­தால் தமிழ்­மக்­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்க வழி­செய்­ய­வேண்­டும்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து. ரவி­க­ரன் தெரி­வித்­தார்.
முல்­லைத்­தீ­வில் திட்­ட­மிட்டு தமி­ழர் நிலங்­களை அப­க­ரிக்­கும் அர­சின் செயற்­பாடு தொடர்­பாக ஆராய்­வ­தற்கு வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே. சிவ­ஞா­னம் தலை­மை­யி­லான அமைச்­சர்­கள் மற்­றும் உறுப்­பி­னர்­கள் அடங்­கிய குழு நேற்று முல்­லைத்­தீ­வுக்­குச் சென்­றது. அவர்­கள் அங்கு பல இடங்­க­ளை­யும் பார்­வை­யிட்­ட­னர். அதன்­பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்து தெரி­வித்த போதே ரவி­க­ரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது-:

இன­வா­தி­கள் கிழக்கை மட்­டு­மல்ல வடக்­கை­யும் முற்­று­மு­ழு­தாக அப­க­ரித்து தமி­ழர்­களை ஒடுக்க முயல்­கின்­ற­னர். அதற்­கான கரு­வி­யா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­து­தான் மகா­வலி எல்­வ­ல­யம். இன்று (நேற்று) மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் எல்­லோ­ரும் சேர்ந்து ஆக்­கி­ர­மிப்புக்கு உள்­ளாக்­கப்­பட்ட சில இடங்­க­ளைப் பார்­வை­யிட்­டுள்­ளோம்.

பௌத்­தர்­கள் இல்­லாத இடத்­தில் பௌத்த விகாரை, அத்­து­மீ­றிய சிங்­கள மீன­வக் குடி­யேற்­றங்­கள், கொக்­கி­ளா­யில் இருந்த 12 தமி­ழர்­க­ளின் கரை­வ­லைப்­பா­டு­கள் சிங்­க­ள­வர்­க­ளி ­டம், அர­சில் உயர் பத­வி­க­ளில் இருப்­ப­வர்­கள் பெரும்­பான்­மை­யான காணி­களை தங்­க­ளின் உற­வி­னர்­க­ளுக்கு பரிந்­து­ரை­க­ளைச் செய்து அதில் தோட்­டங்­கள் பல­வற்றை உரு­வாக்­கி­யுள்­ளார்­கள்.

தமி­ழர்­க­ளின் முந்­தி­ரிகைக்­கு­ளம், ஆமை­யன்­கு­ளம் என்­ப­ன­வற்­றைச் சிங்­கள பெயர் மாற்­றம் செய்­துள்­ளார்­கள். தமி­ழர் வாழ் இடங்­க­ளில் மாய­பு­ரம், கோகி­ல­புர என்­கின்ற திட்­டங்­கள் ஊடாக சிங்­கள குடி­யேற்­றங்­க ளைச் செய்து தமி­ழர்­க­ளின் நிலங்­களை அப­க­ரிக்­கின்­றார்­கள்.

நாயாற்­றின் கரை­யோ­ரங்­க­ளில் அனு­ம­தி­ பெறப்­ப­டா­மல் நூற்­றுக்­க­ணக்­கான மீன­வக் குடும்­பங்­க­ளைக் கொண்­டு­வந்து சட்­ட­வி­ரோத தொழில் செய்­கின்­ற­னர். இந்த இடங்­களை மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் பார்­வை­யிட்­டுள்­ள­னர். இந்த நில­மைக்கு ஒரு முடிவு கட்­ட­வேண்­டும்.

இந்த விட­யங்­கள் மாகா­ண­ச­பை­யில் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக என்­னால் எடுத்­துக்­கூ­றப்­பட்­டுள்­ளன. இதற்கு ஒரு­மித்த கருத்தை அனை­வ­ரும் பதிவு செய்­துள்­ளார்­கள். இத்­து­டன் நின்று விடாது வடக்­கில் உள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளோம். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றில் குரல்­கொ­டுத்து தெற்­கின் அர­சி­யல் தலை­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­ட­வேண்­டிய சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று நாங்­கள் முடிவு செய்­துள்­ளோம். தமி­ழர்­க­ளின் நிலங்­கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டும்–என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + fourteen =

*