இராணுவத்தின் ஏற்பாட்டில் யாழில் அழகு ராணிப் போட்டி..!!

இராணுவத்தினாின் அழகு ராணிப் போட்டி நேற்றுமுன்தினம் இசை நிகழ்ச்சிகளு டன் காங்கேசன்துறையில் நடத்தப்பட்டது.யாழ். பாதுகாப்பு படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் மேற்பார்வையில் யாழ்ப்பாணப் பாதுகாப்பு படை கட்டளை தலைமையகத்தின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் இந்தப் போட்டியும் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பாதுகாப்பு படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, தெல்லிப்பழைப் பிரதேச செயளாளர் எஸ் சிவாஸ்ரீ, யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர், பலாலி விமானப்படை தளபதி குருப் கப்டன் ஜயவீர மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.