;
Athirady Tamil News

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு..!!

0

ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சண்டையில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து குத்வானி பகுதியில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் தலைமையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த துப்பாக்கிச்சண்டையின் போது பொதுமக்களும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு படை வீரரும், மற்றொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அங்கு தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியுள்ளனர். இந்த சமபவத்தில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + twelve =

*