கைகளை பின்னால் கட்டி கொண்டு நீச்சல் அடித்த குழந்தைகள்..!!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலுவா மனப்புரம் பகுதியைச் சேர்ந்த சைபா(8) மற்றும் அவரது சகோதரர் கிஷாம்(5) இருவரும் சாஜி வலச்சேரி என்பவரின் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் இருவரும் மக்களில் நீச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முயற்சியில் ஈடுபட்டனர்.
இருவரும் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு பெரியார் ஆற்றில் ஆஷ்ரமன் கடவு பகுதியிலிருந்து ஆலுவா மனப்புரத்திற்கு நீச்சல் அடித்து கொண்டு வந்தனர். 25 நிமிடங்களில் வெற்றி இலக்கை எட்டினர். இந்த முயற்சியின் போது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
நீச்சல் மிகவும் அத்தியாவசமான பாதுகாப்பு பயிற்சி. இதனை கற்றுக்கொள்வதன் மூலம் நீரில் மூழ்கி பலியாவதை தடுக்கலாம். யார் வேண்டுமானாலும் நீச்சல் பயிற்சியை கற்றுக்கொள்ளலாம் என்பதை உணர்த்தவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக சிறுவர்கள் தெரிவித்தனர். சிறுவர்களின் முயற்சிக்கு பலர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.