;
Athirady Tamil News

மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கான தடை நீக்கம் – மத்திய அரசு புதிய சட்டம்..!!

0

முடியாமல் தவித்தனர். இப்போது அந்த விதிமுறைகள் எல்லாம் தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும் மாநில எல்லைகளில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும், நாடுகளின் எல்லையில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மாட்டுச்சந்தை செயல்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லை பகுதியில் மாட்டுச்சந்தை செயல்படக்கூடாது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்று வரையரை எதுவும் சொல்லப்படவில்லை.

இவ்வாறு புதிய விதிமுறையில் ஏராளமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. எனவே இனி இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு எந்த தடையும் இருக்காது. அதேபோல மாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச் செல்வதற்கும் எந்த நிபந்தனையும் இருக்காது.

அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் மிருகங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஏற்படுத்த வேண்டும். அவர்கள் விதிக்கும் விதிமுறைகள்படி நடந்து கொள்ள வேண்டும். விலங்குகள் சந்தையில் உரிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

வதை ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த புதிய விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.

புதிய வரையரை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 30 நாட்களுக்கு கருத்துக்கள் கேட்கப்படும். அவை வந்ததற்கு பிறகு வரையரை இறுதி செய்யப்பட்டு சட்டமாக கொண்டு வரப்படும்.

இந்த புதிய வரையரைக்கு மிருகவதை தடுப்பு இயக்கத்தினர் கடுமையாக எதிர்பபு தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*