;
Athirady Tamil News

தமிழ் சிங்கள புத்தாண்டு நிழ்வுகள் இன்று கிளிநொச்சியில்..!! (படங்கள்)

0

இனங்களிற்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றன

இனங்களிற்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி 57 படை பிரிவினரும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று காலை முதல் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

காலை 9.30 மணியளவில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமான நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு இன்றுடன் பதவி உயர்வு பெற்று இடமாறறம் பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவண்ண அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சர்வ மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம்பெற்று வருவதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களிற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − eight =

*