;
Athirady Tamil News

அல்ஜீரியாவில் விமான விபத்து; 200 பேர் உயிரிழப்பு..!! (வீடியோ)

0

அல்ஜீரிய இராணுவ விமானமொன்று விபத்துள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

200ற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டு;ளளது.

அல்ஜீரிய தலைநகருக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் ஒருசில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 14 அம்பியுலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் விழுந்து நொருங்கிய இடத்தில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 4 =

*