;
Athirady Tamil News

பதக்கம் வென்ற வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்..!! (படங்கள்)

0

21 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து சென்ற வீரர்கள், பதக்கங்களைப் பெற்று இன்று நாடு திரும்பினர். அவர்களுக்கு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

48 கிலோகிராம் பளு தூக்கும் பெண்கள் பிரிவில் தினுஷா மற்றும் 56 கிலோகிராம் பளு தூக்கும் ஆண்கள் பிரிவில் சத்துரங்க லக்மால்,
ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திக்க திசாநாயக்க ஆகியோர் 3 பதக்கங்களை வென்றனர்.

இலங்கைக்கான மூன்று பதக்கங்களும் பளு தூக்கும் போட்டிகளிலேயே பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே வேளை இந்தப் போட்டியில் 6 பதக்கங்கள் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழா தொடர்ந்து 11 நாள்கள் நடைபெற்றதுடன், இதில் 71 நாடுகளையும், பிராந்தியங்களையும் சேர்ந்த 4500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 275 தங்கப்பதக்கங்களுக்காகப் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*