;
Athirady Tamil News

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலி..!!

0

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து குத்வானி பகுதியில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் துப்பாக்கிச்சண்டையின் போது பொதுமக்களும் சிலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவரும், காயமடைந்த சர்ஜீல் அஹமத்(25), பைசல் இலாஹி(14). பிலால் அஹமத் டண்ட்ரே(16) ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். குத்வானி பகுதியில் அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 8 =

*