;
Athirady Tamil News

சிரியா விவகாரத்தில் ரஷியாவின் தீர்மானம் – ஐ.நா. பாதுகாப்பு சபையில் தோல்வி..!!

0

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிருக்கு பயந்து வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்தது.

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் என்னும் மிருகத்தை ஆதரித்துவரும் ரஷியாவும், ஈரானும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும், இதற்கு மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று அவசரமாக கூடியது.

சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியா முன்வைத்தது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால்தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்னும் நிலையில் ரஷியாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷியா இயற்றிய இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

சில வேளைகளில் 9 வாக்குகளுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ‘வீட்டோ’ என்னும் மறுப்புரிமை அதிகாரம் பெற்றுள்ள ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த தீர்மானம் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*