;
Athirady Tamil News

யாழ் மாநகரசபைக் கட்டிடத்தை அரசியல் கட்சி ஒன்றுக்கு வாடகைக்கு கொடுத்த 10 இலட்சம் ரூபா எங்கே ??..!!

0

தியாகி திலீபன் மாநகர சபையின் அல்ல எமது இனத்தின் அடையாளத்திற்கும் அப்பால் மனித குலத்திற்கே அடையாளமாகவும் ஓர் போராட்ட வடிவத்திற்கு நாமே சொந்தக்கார் என மார்தட்டியதை கிழித்தெறிந்தும் ஆகுதியாகிய ஒருவனுக்கே இன்று சிலை வகைக்கப்படுகின்றதே அன்றி துவக்கு தூக்கியவர்களிற்கெல்லாம், அரசியல் பேசியவர்களிற்கெல்லாம் சிலைவைத்து சிலை வைக்கும் சபையாக மாற்றுமாறு கோரவில்லை . புனிதர்களை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும் என யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதலாவது கன்னி அமர்வு இன்று (11.04.2018) சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தனது கன்னி உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழர் தம் தேச விடுதலைக்காக தம்முயிரை உவந்தளித்த வீரமறவர்களுக்கு அகவணக்கத்தை தெரிவித்துக் கொண்டு இந்த சபையை நம்பி இன்று யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப்பரப்பில் வாழும் மக்களும் பல ஆயிரம் வர்த்தகர்கள் நிறுவனங்களும் உள்ள நிலையில் அவர்களின் வரிப்பணத்திலும் அந்த மக்களின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட பணத்திலும் இன்று இந்தச் சபையின் பெயரில் உள்ள பல கோடி சொத்துக்கள் மழையிலும் வெய்யிலிலும் பழைய இரும்பாக காட்சி தறுவாயில் சபை பஞ்சிகாவத்தை வியாபார சந்தைபோல் காட்சி தருகின்றது. சபையின் கடந்த ஆட்சியில் ஊழல்நடந்ததா என விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதுவே முதலாவது தீர்மானம் என ஓர் கட்சி கூறியுள்ளதோடு அவ்வாறு விசாரணை இடம்பெற்றால் அக்காலத்திற்கு குற்றம் சாட்டப்படும் உறுப்பினர் சபையில் இருந்து ஒதுங்கியிருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நல்ல அறிவிப்பு ஆனால் அவ்வாறு விசாரணை நடாத்த இந்த சபையின் ஆயுட்காலமே போதுமோ என நான் அறியேன்.

ஏனெனில் இந்த சபையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற விதிமீறல் அல்லது முறைகேடு தொடர்பில் பட்டியலிட்டாள் 3 நிமிடம் அல்ல 30 நிமிடமே போதாது. இருப்பினும் உடன் நினைவில் உள்ளவை . என சபைக்கு வரவேண்டிய வருமானங்கள் பல தெரிந்தே இழக்கப்பட்டுள்ளது. உதாரணமாக யாழ். நகரின் மத்தியில் முதலாம் மாடியில் இல.5 இல் இருந்த கட்டிடம் தெரிந்துகொண்டே கட்சிசார் நிறுவனத்திற்கு 2014 ஒக்டோபரில் வழங்கிய நிலையில் 32 மாதங்கள் எந்த வாடகையும் செலுத்தாதபோதும் அதனை அறவிட எந்த நடவடிக்கையும் எடுக்கோவோ அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லவும் இல்லை. இதனால் சபைக்கு 10 லட்சத்து 16 ஆயிரம் ரூபா வருமானம் இன்றுவரை செலுத்தவில்லை. அதேபோல் தமது புகழ்ச்சிக்காக சபையின் சொத்தை தவறாக வழங்கிய சம்பவங்களும் உண்டு.

உதாரணமாக சபையின் வட புறத்தே உள்ள முன்பள்ளிக் கட்டிடத்தில் இயங்கிய ஆரம்ப சுகாதார நிலையத்தை வெளியில் வாடகைக்கு வீடு எடுத்து இயக்கிய சமயம் சபையின் கட்டிடம் இலவசமாக புலனாய்வாளர்களிற்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் வெளியேறியும் சபைக்கு அதிக செலவை வைத்துவிட்டே சென்றுள்ளனர். . நகரைச் சீர்படுத்தவேண்டுமாயின் கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள் களையப்படவேண்டும். தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன்இ ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை நடத்தியிருந்தார். அந்த அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டிருக்கின்றது. புதியதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுஇ மிக்க குறுகிய காலத்தினுள் ஆகக் கூடியது மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கப்படவேண்டும். அந்தப் பரிந்துரைகளை எமது சபைஇ சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உரிய திணைக்களங்கள் ஊடாக விரைவாகச் செய்து முடிக்கவேண்டும்.

கொழும்பில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசுஇ முன்னைய அரசின் ஊழல் மோசடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது. ஆனால் அதில் ஏற்பட்ட தாமதமே கொழும்பு அரசின் மீதான அதிருபுதியதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுஇ மிக்க குறுகிய காலத்தினுள் ஆகக் கூடியது மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கப்படவேண்டும். அந்தப் பரிந்துரைகளை எமது சபைஇ சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உரிய திணைக்களங்கள் ஊடாக விரைவாகச் செய்து முடிக்கவேண்டும். கொழும்பில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசுஇ முன்னைய அரசின் ஊழல் மோசடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது. ஆனால் அதில் ஏற்பட்ட தாமதமே கொழும்பு அரசின் மீதான அதிருப்திக்கு காரணங்களில் ஒன்றாகவுள்ளது.

நாமும் கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை கண்டறிந்து துரித நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும். இந்தச் சபையின் அனைத்து உறுப்பினர்களும்இ கடந்த கால மோசடி தொடர்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு எதிராக இருப்பார்கள் என்று எண்ணவில்லை. இதனைச் செயலுருப்படுத்தவேண்டியதுஇ யாழ்ப்பாணம் மாநகர சபையின் நகர பிதா ஆனோர்ல்ட்டின் கடமை. அதேபோன்று தியாகி திலீபன் மாநகர சபையின் அல்ல எமது இனத்தின் அடையாளத்திற்கும் அப்பால் மனித குலத்திற்கே அடையாளமாகவும் ஓர் போராட்ட வடிவத்திற்கு நாமே சொந்தக்கார்ர் என மார்தட்டியதை கிழித்தெறிந்தும் ஆகுதியாகிய ஒருவனுக்கே இன்று சிலை வகைக்கப்படுகின்றதே அன்றி துவக்கு தூக்கியவர்களிற்கெல்லாம் இ அரசியல் பேசியவர்களிற்கெல்லாம் சிலைவைத்து சிலை வைக்கும் சபையாக மாற்றுமாறு கோரவில்லை . புனிதர்களை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். என்றார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*