;
Athirady Tamil News

பிங்கிரியவில் அரச வெசாக் வைபவம் – அமைச்சரவை அங்கீகாரம்..!!

0

2562 ஆம் ஸ்ரீ பௌத்த வருடத்திற்கான அரச வெசாக் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருநாகல் பிங்கிரிய தேவகிரி ரஜமஹாவிகாரையினை கேந்திரமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தினை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், அதனுடன் தொடர்புபட்ட மேலும் பல நிகழ்ச்சிகளை செயற்படுத்துவதற்கும் உத்தேசித்துள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*