;
Athirady Tamil News

இரண்­டா­வது வாகன ‘பெமிட்­டுக்­கும்’ விண்­ணப்­பிக்­கும் வடக்கு அமைச்­சர்..!!

0

வடக்கு மாகாண சபை­யின் சுகா­தார அமைச்­சர் மருத்­து­வர் ஜி.குண­சீ­லன், இரண்­டா­வது வாகன வரி விலக்கு அனு­ம­திப் பத்­தி­ரத்­துக்கு விண்­ணப்­பித் துள்­ள­தாக, பேர­வைச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு, கொழும்பு அரசு சிறப்பு அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­தின் ஊடாக வாகன வரி விலக்கு அனு­ம­திப் பத்­தி­ரத்தை கடந்த ஆண்டு பெற்­றுக் கொடுத்­தது. வடக்கு மாகாண சபை­யின் உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் வாகன வரி விலக்கு அனு­ம­திப் பத்­தி­ரத்­தைப் பெற்­றுக் கொள்­வ­தற்கு விண்­ணப்­பித்­த­னர்.

அப்­போது வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ராக இருந்த மருத்­து­வர் ஜி.குண­சீ­ல­னும் விண்­ணப்­பித்­தி­ருந்­தார். அவர் மருத்­து­வ­ராக இருந்­த­போது, அர­சி­னால் வழங்­கப்­பட்ட வாகன வரி விலக்கு அனு­ம­திப் பத்­தி­ரத்தை ஏற்­க­னவே பெற்­றி­ருந்­தார்.

அத­னைப் பெற்று 5 ஆண்­டு­கள் பூர்த்­தி­யா­வ­தற்கு முன்­னர் விண்­ணப்­பித்­தமை கார­ண­மாக, மாகாண சபை­யின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும்­போது வாகன வரி விலக்கு அனு­ம­திப் பத்­தி­ரம், மருத்­து­வர் ஜி.குண­சீ­ல­னுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.

வாகன வரி விலக்கு அனு­ம­திப் பத்­தி­ரத்­தைப் பெற்று 5 ஆண்­டு­கள் பூர்த்­தி­ய­டைந்­துள்­ளன. இத­னால் மாகாண சபை உறுப்­பி­ன­ருக்­கு­ரிய வாகன வரி விலக்கு அனு­ம­திப் பத்­தி­ரத்­தைப் பெற்­றுக் கொள்­வ­தற்கு, மருத்­து­வர் ஜி.குண­சீ­லன் தற்­போது விண்­ணப்­பித்­துள்­ளார். வடக்கு மாகாண பேர­வைச் செய­லக வட்­டா­ரங்­க­ளும் இதனை உறு­திப்­ப­டுத்­தி­யது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*