;
Athirady Tamil News

காணி விடுவிப்பு விவகாரத்தால்- செய்தியாளர்கள் மீது ராஜித பாய்ச்சல்..!!

0

வடக்­கில் பொது மக்­க­ளி­டம் இருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­கள் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­ப­ட­ வேண்­டும். தெற்கு மக்­க­ளின் காணி­களை இரா­ணு­வம் அப­க­ரித்­தால் அவர்­கள் வெறு­மனே இருப்­பார்களா? பொது மக்­க­ளின் காணி­க­ளில் இரா­ணு­வத்­தி­னர் வெதுப்­ப­கம் அமைத்து வியா­பா­ரம் செய்­வது சரியா என்று அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன கேள்­வி­யெ­ழுப்­பி­னார்.

அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில், ‘வடக்­கில் 650 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ள ­னவா? நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் மீதான எதிர்ப்­பின் கார­ண­மாக இது நடை­பெ­று­கின்­றதா?’ என்று செய்­தி­யா­ளர் கேள்வி எழுப்­பி­னார்.

‘வடக்­கில் 650 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன. அவ்­வாறு விடு­விப்­ப­தில் என்ன தவ­றி­ருக்­கின்­றது. அந்த மக்­கள் படும் கஷ;டங்­களை நீங்­கள் நேரில் சென்று பார்த்­தால் அவர்­க­ளின் அவ­லம் உங்­க­ளுக்­குத் தெரி­யும். உங்­கள் காணி­களை யாரா­வது இவ்­வாறு பறித்­தெ­டுத்­தால் நீங்­கள் என்ன செய்­வீர்­கள். உங்­க­ளுக்கு அப்­படி நடந்­தால்­தான் புரி­யும். தம்­மி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீள கோரும் உரிமை அவர்­க­ளுக்கு இருக்­கின்­றது’ என்று பதி­ல­ளித்­தார்.

‘எனி­னும் காணி விடு­விப்­பா­னது நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கார­ண­மாக விரை­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதா?’ என்று மீள­வும் செய்­தி­யா­ளர் கேள்வி எழுப்­பி­னார். ‘நீங்­கள் எப்­படி அவ்­வாறு கூற முடி­யும். 650 ஏக்­கர் காணி­க­ளுக்­கான நில அள­வையை இரண்டு வாரங்­க­ளுக்­குள் செய்ய முடி­யுமா?

அது­மட்­டு­மன்றி மக்­க­ளின் காணி­களை இரா­ணு­வத்­தி­னர் வெதுப்­ப­கம் அமைத்­துக் கொண்­டி­ருப்­பது நியா­ய­மா­னதா? தெற்­கில் இவ்­வாறு நடந்­தால் என்ன செய்­வீர்­கள்? வடக்கு மக்­க­ளின் காணி­கள் விரை­வாக விடு­விக்­கப்­பட வேண்­டும் என்­பதை நான் மிக­வும் திட­மாக வலி­யு­றுத்­திக் கூறு­கின்­றேன்’ என்று பதி­ல­ளித்­தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 9 =

*