;
Athirady Tamil News

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: அண்ணா அறிவாலயம், கருணாநிதி, மு க ஸ்டாலின் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்..!! (வீடியோ)

0

பிரதமர் நரேந்திர மோடி திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுவதற்காக தமிழகம் வருகிறார்.

இந்த கண்காட்சி நேற்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

இதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வருகிறார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் கூறினார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12-ம் தேதியன்று எல்லோருடைய வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கருப்பு உடையணிய வேண்டும் என்றும், கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

சென்னை செனடாப் சாலையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது

மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி, ஸ்டாலின் வீட்டில் இன்று கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*