;
Athirady Tamil News

சாவ­கச்­சே­ரி­யில் சட்­ட­வி­ரோத கொல்­க­ளத்­துக்கு சீல்..!!

0

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சபை­யின் தொழி­லா­ளர் விடு­தி­யில் சிர­ம­தா­னம் மேற்­கொள்ள தொழி­லா­ளர் குடி­யி­ருப் புப் பகு­திக்கு, சபைக்கு புதி­தா­கத் தெரிவு செய்­யப்­பட்ட தவி­சா­ளர் பிர­தித் தவி­சா­ளர் உள்­ளிட்ட உறுப்­பி­னர்­கள் மற்­றும் பொது­மக்­க­ளு­டன் சென்­றி­ருந்­த­னர்.

அந்­தப் பகுதி மக்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக இயங்­கும் கொல்­க­ளத்தால் தமக்கு சுகா­தா­ரச் சீர்­கேடு காணப்­ப­டு­வ­தாக முறை­யிட்­டி­ருந்­த­னர். அங்கு சென்று பார்­வை­யிட்ட தவி­சா­ளர் பிர­தித் தவி­சா­ளர் உறுப்­பி­னர்­கள், 50க்கும் மேற்­பட்ட மாடு­கள், ஆடு­கள் பட்­டி­யாக இருப்­பதை பார்­வை­யிட்­ட­னர். உள்ளே கொல்­க­ள­மும் இருந்­தமை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­த­னர்.

சபைக்­குத் திரும்­பிய தவி­சா­ளர் சட்­ட­வி­ரோ­த­மாக இயங்­கும் கொல்­க­ளத்தை மூடு­மா­றும் அங்கு காணப்­ப­டும் மாடு­கள், ஆடு­கள் மற்­றம் பொருள்­களை வெளி­யேற்­று­மாறு காணி உரி­மை­யா­ள­ருக்கு அறி­வித்து அவற்றை வெளி­யேற்ற மூன்று தினங்­கள் கால அவ­கா­சம் வழங்­கி­யி­ருந்­தார்.

சபை­யின் அனு­ம­தி­யின்றி 10 அடி உயர மதில் கட்­டப்­பட்டு அத­னுள் கொல்­க­ளம் அமைத்­துள்­ள­து­டன் அங்கு பெரு­ம­ளவு கால்­ந­டை­க­ளும் கட்­டப்­பட்­டி­ருந்­த­து­டன் வாக­னங்­க­ளும் காணப்­பட்­டன. இவை அகற்­றப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தனி­யார் கொல்­க­ளம் அலு­வ­லர்­க­ளால் சீல் வைக்­கப்­பட்டு மூடப்­பட்­ட­தெ­னத் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 18 =

*