;
Athirady Tamil News

வவுனியாவில் புழக்கத்திலிருந்த போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டது..!! (படங்கள்)

0

வவுனியாவில் போலி நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (12) தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் புதிய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திக்கிடமாக நடமாடிய கலாவத்தையை சேர்ந்த ஒருவரை பொலிஸார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 45000 ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஷார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த நபர் விசேட அதிரடிப்படையினருக்கு சமையல் செய்பவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன் குறித்த நபர் பல போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி வவுனியா வர்த்தக நிலையங்களில் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக பணக்கொடுக்கல்வாங்கலில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளதுடன் 1000 ரூபா பண நோட்டுக்களை பரீட்சித்து பெறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*