;
Athirady Tamil News

சுன்னாகம் சந்தை வியாபாரம் தொடர்பான பிரேரணை- பிரதேசசபை தவிசாளர் க. தர்ஷன் விளக்கம்..!!

0

சுன்னாகம் சந்தை வியாபாரம் தொடர்பான பிரேரணை – வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேசசபை தவிசாளர் க. தர்ஷன் விளக்கம்

சுன்னாகம் சந்தை வியாபாரம் தொடர்பாக நேற்று வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேசசபையில் இடம்பெற்ற விவாதங்கள் தொடர்பாக சபையின் தவிசாளரான க.தர்ஷன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். கடந்த உள்ளூராட்சித்தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்க்கூட்டமைப்பினரான நாம், தவிசாளர் தெரிவின் பின்னர் எமது நேற்றைய வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேசசபையின் முதலாவது அமர்வின் போது சுன்னாகம் சந்தை தொடர்பாக பிரேரிக்கப்பட்டு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதில் இனிமேல் சுன்னாகம் சந்தையில் புதிய வெளியாட்களுக்கு வியாபாரம் செய்ய அனுமதி இல்லை எனவும், இப்போதுள்ளவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்யலாமெனவும், வலிகாமம் தெற்கு பிரதேசசபை எல்லைக்குள் இனிமேல் நடைபாதை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை எனவும், இப்போது அனுமதியின்றி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நடைபாதை வியாபாரங்கள் படிப்படியாக அகற்றப்படும் எனவும், பண்டிகை நாட்களிலும் இதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவித்தார். இவ்விதி சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் சந்தைகள் இரண்டுக்கும் பொருந்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*