;
Athirady Tamil News

4000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு யாருடையது? கண்டுப்பிடித்த ஆராய்ச்சியாளர்கள்..!!

0

நீண்டகால ஆராய்ச்சிக்கு பின்னர் சுமார் 4000 வருடம் பழமையான மண்டை ஓடு யாருக்கு சொந்தமானது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI கண்டுபிடித்துள்ளது.

கிட்டத்தட்ட 103 வருடங்களுக்கு முன்னர் அதாவது கடந்த 1915ஆம் ஆண்டு இந்த மண்டை ஓடு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்ததில் அது 4000 வருடம் பழமையானது என்பதை உறுதி செய்தனர்

ஆனால் இந்த தலை யாருடையதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் பலவருடம் தலையை பிய்து கொண்டனர். காரணம் ஏற்கனவே இந்த தலை மோசமாக உடைந்து இருந்தது. சிறு ரத்த செல்கள் கூட இதில் காணப்படவில்லை. இது ஆணா, பெண்ணா என்று கூட ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலையில் இருந்தனர்.

பின்னர் ஒருவழியாக நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ 5 வருடமாக ஆய்வு செய்தது. ஆகவே சரியாக 103 வருடத்திற்கு பின் இந்த 4000 வருட மர்மம் வெளியே வந்துள்ளது.

எனவே தற்போது இந்த மண்டை ஓட்டின் வரலாறு என்ன என்று வியத்தகு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது

எகிப்து நாட்டில் உள்ள கல்லரை ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இது அங்கு 4000 வருடம் முன்னர் வாழ்ந்த ஜேஹுடிநாஹ்டின் எனும் எகிப்து கவர்னரின் மண்டை ஓடு என்பதை எஃப்.பி.ஐ தற்போது உறுதி செய்துள்ளது.

இதோடு இல்லாமல் இந்த மண்டை ஓட்டை வைத்து மேலும் சில ஆராய்ச்சிகளை செய்யப்போவதாகவும் எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*