;
Athirady Tamil News

மட்டக்களப்பில் மீனவர் சடலமாக மீட்பு..!! (படங்கள்)

0

வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி ஆற்றில் வயோதிப மீனவர் ஒருவர் நேற்று (11) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பனிச்சங்கேணி சல்லித்தீவில் வசிக்கும் 64 வயது நிரம்பிய தங்கராசா என்பவரே பனிச்சங்கேணி ஆற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மீனவர் மீன் பிடிப்பதற்கு ஆற்றில் இறங்கிய வேளையில் பள்ளத்தினுள் அகப்பட்டு இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மீனவரின் சடலம் வாகரை பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 17 =

*