;
Athirady Tamil News

கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது..!!

0

கடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று (11) அரசாங்கத்தால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பதாவிட்டால் அவர்கள் பணியில் இருந்து சுயமாக விலகிச் சென்றவர்களாக கருதப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று குறிப்பிட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து தமது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்ததாக அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 6 =

*