;
Athirady Tamil News

பிளாஸ்டிக் தொடர்பில் கரிசனை கொள்ள வைக்கும் மற்றுமொரு மரணம்..!!

0

சூழலுக்கு தீங்கு விளைவிப்பது மாத்திரமன்றி உயிரினங்களை கொல்லக்கூடிய அளவிற்கு பிளாஸ்டிக் ஆபத்து நிறைந்தது என நீண்ட காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு சான்றாக ஐந்தறிவு ஜீவன்கள் பலவற்றின் மரணங்கள் விளங்குகின்றன.இவற்றின் வரிசையில் தற்போது ஸ்பேர்ம் வேல் எனும் வகையைச் சார்ந்த திமிங்கிலமும் இணைந்துள்ளது.

ஸ்பெயினின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் இத் திமிங்கிலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை ஆய்வுக்கு உட்படுத்திய போது அதன் வயிற்றில் சுமார் 29 கிலோ கிராம்கள் வரையில் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்பட்டுள்ளன.

10 மீற்றர்கள் நீளமான இந்த திமிங்கிலத்தின் இறப்பிற்கு குறித்த பிளாஸ்டிக் பொருட்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது விழுங்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சமிபாடடையாமையே காரணம் ஆகும்.

இதேவேளை ஆண்டு தோறும் சமுத்திரங்களில் சுமார் 8 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் கலக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − three =

*