வெற்றிடமான அமைச்சு பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்..!!

பதில் அமைச்சர்கள் நான்கு பேர் சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இதன்படி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராக சரத் அமுனுகமவும், அனர்த்த முகாமைத்துவ பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் சமூக வலுவூட்டல் மற்றும் தொழில் உறவு பதில் அமைச்சராக மலிக் சமரவிக்ரமவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனுடன் விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக பைசர் முஸ்தபாவும், ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்கள் நேற்று நள்ளிரவுடன் ;அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தததை தொடர்ந்து வெற்றிடமான அமைச்சு பதவிகளுக்கு இவ்வாறு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.