;
Athirady Tamil News

புதுவையில் உண்ணாவிரதம் இருந்த பா.ஜ.க.வினர் மீது சரமாரி கல்வீச்சு..!! (வீடியோ)

0

பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகளை கண்டித்து புதுவையில் பா.ஜ.க. சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது. அதில் மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் கறுப்பு கொடி ஊர்வலம் நடந்தது.

இதில், திராவிடர் கழகம், மாணவர் கூட்டமைப்பு, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய முன்னணி, சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆகியவையும் பங்கேற்றன.

அவர்கள் நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகே இருந்து அண்ணா சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

பஸ் நிலையம் அருகே வந்த போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும், அதையும் மீறி சிலர் அங்கிருந்து ஓடி வந்தனர்.

அவர்கள் பாரதீய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு நேர் எதிராக நின்று கறுப்பு கொடி காட்டினார்கள்.

இதனால் பா.ஜனதா கட்சியினர் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் நாற்காலியை தூக்கி கறுப்பு கொடி காட்டியவர்கள் மீது வீசினார்கள்.

பதிலுக்கு எதிர் தரப்பினர் கற்களை வீசினார்கள். இந்த நேரத்தில் போலீசார் தடுத்து வைத்திருந்த நபர்களும் அவர்கள் பிடியில் இருந்து ஓடி வந்து பா.ஜனதா கட்சியினர் மீது கற்களை வீசினார்கள். இருதரப்பில் இருந்தும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டது.

உடனே போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து கறுப்பு கொடி காட்டியவர்களை கைது செய்தார்கள். அவர்களில் 55 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அமைதி ஏற்பட்டது. பா.ஜனதா கட்சியினர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.

அப்போது போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வில்லை என கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*