;
Athirady Tamil News

வலி. வடக்கு இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த 683 ஏக்கர் காணிகள் நாளை விடுவிப்பு..!!

0

வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த 683 ஏக்கர் காணிகள் நாளை (13) வெள்ளிக்கிழமை யாழ். மாவட்டச் செயலாளரிடம் கையளிகப்படுகின்றன. கட்டுவன் – மயிலிட்டி வீதிக்கு மேற்குப் பக்கமாகவுள்ள காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படுகின்றன”

இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

அத்துடன், பருத்தித்துறை – காங்கேசன்துறை – பொன்னாலை வீதி நாளை தொடக்கம் தினமும் காலை 6 மணி தொடக்கம் இரவு 7 மணிவரை அனைத்து வாகனப் போக்குவரத்துக்குமாக திறந்துவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களித்ததன் அடிப்படையிலா நாளை தினம் 683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுகின்றன? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“வலி. வடக்கில் நாளை விடுவிக்கப்படும் காணிகள் தொடர்பில் உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த 2 ஆண்டுகளாக ஆராயப்பட்டு வந்தன. பல சந்திப்புக்கள் இடப்பெற்றன. அவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

அந்தப் பகுதிகளிலிருந்து படை முகாம்களை அகற்ற இராணுவத்துக்கு ஏற்பட்ட தாமதமே கால அவகாசத்துக்கு காரணம்

அத்துடன், வலி. வடக்கில் இன்னும் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுக்கப்படவேண்டும்” என்று மாவட்டச் செயலர் பதிலளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*