;
Athirady Tamil News

புதிய அமைச்சரவையில் வடக்கு எம்.பிக்களும் இடம்? பரபரப்பாகும் அரசியல்..!!

0

புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் வடமாகாண அரசியல்வாதிகளான அங்கஜன் மற்றும் காதர் மஸ்தான் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.தற்போதைக்கு சுதந்திரக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான இவர்கள் இருவரும் புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதியமைச்சுப் பதவிகளில் நியமிக்கப்படலாம் என்று

ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண முதலமைச்சர் பதவியில் கண் வைத்துள்ளதால் மத்திய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக் கொள்வதில் அவர் முனைப்புக் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அதே ​போன்று கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு பிரதியமைச்சுப் பதவிகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஒரு பிரதியமைச்சுப் பதவியும் மேலதிகமாக வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*