;
Athirady Tamil News

வவுனியா நகரசபையை கைப்பற்ற கூட்டமைப்பு கடும் பிரயத்தனம்- ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாட தூதனுப்பியது…!!

0

வவுனியா நகரசபைக்கான தலைவரை தெரிவு செய்வதில் எற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வுகாணும் பொருட்டு வவுனியா வாடி வீட்டில் தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் சத்தியலிங்கத்துடன் சிலர் கலந்துரையாடியுள்ளனர்.

வவுனியா நகரசபையின் தலைவர் தெரிவில் ஐக்கியதேசிய கட்சியும் தமது தரப்பில் ஒருவரை நிறுத்தி போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் ஐ.தே.கட்சிஇ சுதந்திர கட்சி, பொதுஜனபெரமுன, ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலை கூட்டணி பொன்ற கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் இருந்து நகர சபை கைமாறிவிடமா என்ற சந்தேகம் எழந்துவிடும் என்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு சிலரை வைத்து தமிழ் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட ஈழமக்கள் புரட்சிகர முன்னணி மற்றும் ஈழவர் ஜனநாயக கட்சியின் பிரமகர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக வவுனியா வாடி வீட்டில் பிரத்தியோக அறையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் கெங்காதரன், வர்த்தக சங்கத்தின் செயலாளர் கோ.ஸ்ரீஸ்கந்தராஜா, வர்த்தக சங்கத்தின் பொருளாளர் புஸ் என அழைக்கப்படும் மா.கதிர்காமராஜா, வர்த்தக சங்கத்தின் உறுப்பினர் க.ஸ்ரீசங்கர், தமிழ் விருட்சத்தின் தலைவர் செ.சந்திரகுமார், ஈழவர் ஜனநாயகக் கட்சி மற்றும் சில கட்சித்தலைமைகளுடனும் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இதில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் இச்சந்திப்பு முடிவடைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 10 =

*