;
Athirady Tamil News

மாணவர்களின் ஒழுக்கமின்மை: பணியை உதறித்தள்ளிய ஆசிரியை..!!

0

பெண்ணொருவர் தான் மிகவும் நேசிக்கும் ஆசிரியை பணி செய்து வந்த நிலையில் தற்போது அந்த வேலையை உதறி தள்ளியுள்ளார்.

ஜூலி மர்பர்கர் என்ற ஆசிரியை தனக்கு பிடித்த ஆசிரியை வேலையை ராஜினாமா செய்தது ஏன் என சமூகவலைதளங்களில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த வாரம் என் வகுப்பறை மாணவ, மாணவிகளின் ரிப்போர்ட் கார்ட் வெளியானது.அதில் பாதி பேர் தெரிவில் தோல்வியடைந்திருந்தார்கள்.

முக்கிய அசைன்மெண்ட்களை அவர்கள் சரிவர செய்யாததே அதற்கு காரணமாகும்

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தும் பெரும்பாலானோர் அதை கண்டுகொள்ளவில்லை.

இது என்னை பாதித்தது, இதோடு என் வகுப்பறையில் இருக்கும் மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்வதில்லை.

வகுப்பறையில் உள்ள தரைகள், புத்தகங்கள் வைக்கும் அறைகள் போன்றவற்றை அவர்கள் உடைத்துள்ளார்கள்.

ஜன்னல்களில் சிவிங்கம்களை ஒட்டி வைத்துள்ளார்கள். இதை நான் ஏன் பெரிதாக சொல்கிறேன் என்றால், என் மாணவர்களுக்காக இந்த வசதிகளை எல்லாம் என் சொந்த செலவில் செய்து கொடுத்தேன்.

பள்ளி நிர்வாகம் அதற்காக நிதி ஒதுக்கவில்லை, இதுவும் என்னை பாதித்தது, இந்த விடயங்களெல்லாம் நிறுத்தப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 15 =

*