;
Athirady Tamil News

அவளை காப்பாற்றுங்கள்: கேரளாவில் காணாமல் போன மனைவிக்காக உருகும் கணவர்..!!

0

அயர்லாந்தைச் சேர்ந்த பெண்ணோருவர், இந்தியாவின் கேரள மாநிலத்தில் காணாமல் போனதைத் தொடர்ந்து, தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி அவரது கணவர் உருக்கமான கோரிக்கையை வைத்துள்ளார்.

அயர்லாந்தைச் சேர்ந்த லீகா என்ற பெண், மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற தனது சகோதரியுடன், கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவிற்கு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 4ஆம் திகதி மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற லீகா, கடற்கரையில் யாருடனோ பேசிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில், தனது மனைவியைத் தேடி இந்தியா வந்த லீகாவின் கணவர் ஆண்ட்ரூ ஜோர்டன், கடந்த 17ஆம் திகதி கோவளம் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால், பொலிசார் இதுதொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும், கடந்த மூன்று வாரமாக ஜோர்டனை அலைக்கழிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்ட்ரூ ஜோர்டன் கூறுகையில், ‘என் மனைவி உயிருடன் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். கண்டிப்பாக அவர் உயிருக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால், அவருக்கு ஏதோ பெரிய ஆபத்து நிகழ்ந்து இருக்கிறது.

அவர் இப்போது சரியான சூழ்நிலையில் இல்லை. அவரை காப்பாற்ற வேண்டும்’ என தெரிவித்துள்ளார். மேலும், கேரள வானொலி ஒன்றில் அவர் கூறுகையில்,

என் மனைவியை மக்கள்தான் கண்டுபிடித்து தர வேண்டும். அவர்களுக்கு நான் 1 கோடி கூட சன்மானம் கொடுக்கிறேன். பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் இதுகுறித்து பேச வேண்டும். என் மனைவியை காப்பாற்ற வேண்டும்’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*