;
Athirady Tamil News

கர்நாடகாவில் 18-ந்தேதி முதல் பிரதமர் மோடி பிரசாரம்..!!

0

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த (மே மாதம்) மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் 72 பேர் பட்டியலை பா.ஜ.க.மேலிடம் கடந்த 9-ந்தேதி அன்று வெளியிட்டது.

ஏற்கனவே பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக மாநிலம் முழுவதும் தொடர்ந்து சூறாவளி சுற்று பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து 20 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., ம.ஜ.த. ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க.வை வெற்றி பெற செய்வதற்காக பிரதமர் மோடி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக பிரதமர் மோடி வருகிற 18-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள கர்நாடகாவுக்கு வருகிறார். 18-ந்தேதி முதல் மே மாதம் 10-ந்தேதி வரை 22 நாட்களில் அடுத்தடுத்து 20 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளி, தாவணகெரே, பெலகாவி, கலபுர்கி, பீதர், மங்களூரு உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பிரதமர் தீவிர பிரசாரம் செய்கிறார்.

இது தவிர பெங்களூரு, மங்களூரு, ஹுப்பள்ளி உள்ளிட்ட 3 இடங்களில் திறந்த காரில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்யவும் பிரதமர் திட்டுமிட்டுள்ளார்.

தேர்தலின் கடைசி நேரத்தில் பிரதமர் மோடியின் பிரசாரம் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

மேலும் முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத், வசுந்தரா ராஜே சிந்தியா, ரமண்சிங், சிவராஜ் சிங் சவுகான், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, ஸ்மிருதி ராணி, நிதின் கட்ரி, முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோரும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். #Karnatakaelection #PMModi

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 8 =

*