;
Athirady Tamil News

ஹாட்ரிக் வெற்றியும் தோல்வியும்..!!

0

ஐபிஎல் தொடரின் 11ஆவது சீசனில் இன்று (ஏப்ரல் 13) நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத உள்ளன.

பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் பஞ்சாப் அணி, டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால் பெங்களூரு அணி கொல்கத்தாவிடம் தோல்வியைத் தழுவி ஏமாற்றமளித்தது. அதன் தொடர்ச்சியாக இவ்விரு அணிகளும் இரண்டாவது ஆட்டத்தில் பங்கேற்க உள்ளன.

இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மொத்தமாக 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 12 முறை பஞ்சாப் அணியும், 8 முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. 2017ஆம் ஆண்டு சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாப் அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக பெங்களூரு அணியை மூன்று முறை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைக்கும். அதே சமயம் பெங்களூரு அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து மோசமான சாதனைப் படைக்கும்.

கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர் க்றிஸ் கெய்ல் இந்த முறை பஞ்சாப் அணியால் ஏலம் பெறப்பட்டார். ஆனால் அவர் சில காரணங்களால் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. இன்று போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானத்தில் கெய்ல் இதற்கு முன்னர் பல முறை அதிரடியாக விளையாடி ரன் சேர்த்துள்ளதால் இந்த போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல் முதல் போட்டியில் இடம்பெறாத ஆரோன் பின்ச் இந்த போட்டியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பேட்டிங்கில் வலுவான நிலையை பஞ்சாப் அணி எட்டியுள்ளது. அதேசமயம் பெங்களூரு அணி விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், டீ காக் மற்றும் பிரெண்டன் மெக்குல்லம் என பேட்டிங்கில் சிறப்பாக உள்ளது.

​பந்துவீச்சில் சஹல் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட உமேஷ் யாதவ் நல்ல ஃபார்மில் உள்ளதால் பெங்களூரு அணி கூடுதல் பலம் பெறுகிறது. எனவே இன்றையப் போட்டி மிகுந்த சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + nineteen =

*