உ.பி.யில் மீண்டும் கொடூரம் – சொத்து தகராறில் தாய், மகள் உயிருடன் எரித்துக் கொலை..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள புர்ஸட்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு குடும்பத்தினரிடையே சமீப காலமாக சொத்து தொடர்பான தகராறு நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில், இந்த தகராறு துவேஷமாக மாறிய நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தனது சகோதரர், அவரது மனைவி மற்றும் மகளை உயிருடன் தீயிட்டு கொளுத்தினார். படுகாயமடைந்த அவர்கள் மூவரும் ரேபரேலியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி அமீன் (45) மற்றும் அவரது மகள் ஆப்ரீன்(18) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். #tamilnews