;
Athirady Tamil News

விடுதியில் டெல்லி ஐ.ஐ.டி. மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!

0

டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப பயிலகத்தில் (ஐ.ஐ.டி.) முதுநிலை வேதியல் பாடத்தை முதலாம் ஆண்டு மாணவராக படித்து வந்தவர், கோபால் மாலூ. (வயது21) மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த கோபால் நீலகிரி விடுதியில் உள்ள தனது அறையில் இன்று தூக்கில் பிணமாக தொங்கினார்.

தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், கோபாலின் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த மாணவர் கோபால், கடந்த பத்தாம் தேதி அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர் என்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #tamilnews #studentsuicide #iitdelhi

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − six =

*