;
Athirady Tamil News

புதுவருடத்தை முன்னிட்டு ஓமந்தைப் பிரதேசத்தில், உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு..! (படங்கள்)

0


வவுனியா – ஓமந்தைப் பிரதேசத்தில் வறுமையானவர்களுக்கு ஓமந்தை எக்ஸ்போ இரும்பகத்தின் உரிமையாளர் சுரேஷ் புதுவருடத்தை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

புதுவருடத்தை முன்னிட்டு இன்று ஐந்தாவது தடவையாக ஓமந்தைப் பிரதேசத்தில் யுத்த பாதிப்புக்குள்ளாகி வறுமையுடன் வாழ்ந்து வருபவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஓமந்தை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கலைச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓமந்தை குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுகந்த மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 17 =

*