;
Athirady Tamil News

மலம் கழித்தால் காசு! அதை வைத்து என்ன செய்கிறார்கள் தெரியுமா?..!!

0

அவுஸ்திரேலியாவின் Centre for Digestive Diseases (CDC) காலைக்கடன் கழிப்பதற்கும் காசு கொடுக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வாரத்திற்கு 250 டொலர்கள் வரை மனிதக் கழிவிற்காக கொடுக்க அவுஸ்திரேலியாவின் CDC தயாராக உள்ளது.

மனிதக் கழிவை வைத்து என்ன செய்கிறார்கள் இங்கு? ஆட்டிஸம், multiple sclerosis மற்றும் நீண்ட நாள் வயிற்றுப்போக்கு ஆகியவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கேப்சூல்கள் செய்வதற்கு மனிதக் கழிவு பயன்படுகிறது.

ஆரோக்கியமான மனிதக்கழிவு கிடைப்பது அரிதாக உள்ளதால் ஒரு முறை மனிதக்கழிவு கொடுத்தால் 50 டொலர்கள் கிடைக்கும்.ஒரு வாரத்தில் 250 டொலர்கள், ஒரு ஆண்டில் 13,000 டொலர்கள்வரை சம்பாதிக்கலாம்.

மனிதக்கழிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை பல கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன. குடலுக்குள்ளும் அவ்வாறே. இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்.

ஒவ்வொரு முறை நீங்கள் ஆண்டிபயாட்டிக்குகளை எடுக்கும்போதும் இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன.

அந்த நேரத்தில் நீங்கள் எசகு பிசகாக எதையாவது சாப்பிட்டால் அவற்றில் ஏதேனும் நோய்க்கிருமிகள் இருந்தால் அவை அப்படியே சென்று உங்கள் குடலை ஆக்கிரமித்துக் கொள்ளும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*