;
Athirady Tamil News

மூன்றாவது அணிக்கு வலுசேர்க்க தேவேகவுடாவை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்..!!

0

தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், தேசிய அளவில் பெரிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக பலம்மிக்க மூன்றாவது அணி அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த யோசனைக்கு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் மாநில கட்சிகளை ஒன்றிணைப்பதில் அவர் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கர்நாடகம் சென்ற சந்திரசேகர் ராவ், மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான தேவேகவுடாவை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மூன்றாவது அணி மக்களை ஒருங்கிணைக்கும் கூட்டணியாக அமையும். இது 2019-ம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள கர்நாடகா சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்.

கடந்த 65 ஆண்டுகளாக காங்கிரசும், பா.ஜ.க.வும் நாட்டில் மோசமான ஆட்சியை நடத்தியுள்ளன. காவிரி நீர் தொடர்பாக தமிழகமும், கர்நாடகமும் ஏன் சண்டை போட்டுக் கொள்கின்றன. கடந்த 70 ஆண்டுகளாக இந்த பிரச்சனைக்கு ஏன் தீர்வு காணப்படவில்லை என கேள்வி எழுப்பினார். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*