;
Athirady Tamil News

போரா­டு­கின்ற மக்­களை அச்­சு­றுத்­தி­ய­வர் கைது..!!

0

முல்­லைத்­தீ­வில் போராட்­டத்­தில் ஈடு­ப­டும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளைக் கத்­தி­யைக்­காட்டி அச்­சு­றுத்­தி­னார் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் நப­ரைப் பொலி­ஸார் கைது செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

அவர் நீதின்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
இறு­திப் போரில் படை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்­கள் மற்­றும் காணா­மல்­போ­ன­வர்­க­ளான தமது உற­வி­னர்­க­ளைத் தேடிக் கண்­ட­றிந்து தரு­மாறு கோரி அவர்­க­ளது உற­வி­னர்­கள் முல்­லைத்­தீ­வில் தொடர் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். 400 நாள்­க­ளுக்­கும் மேலாக அவர்­க­ளது போராட்­டம் தொடர்­கின்­றது.

அவர்­கள் போராட்­டம் நடத்­தும் இடத்­திற்கு நேற்­று­முன்­தி­னம் மாலை வந்த நபர் ஒரு­வர் கத்­தி­யைக்­காட்டி அச்­சு­றுத்­தி­னார். தம்மை அவர் தாக்க முற்­பட்­டார் என்­றும் அங்­கி­ருந்­த­வர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.ஒரு­வாறு அவரை மடக்­கிப் பிடித்து பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

குற்­றச்­சாட்டு ஏதும் பதிவு செய்­யா­மல் சந்­தே­க­ந­ப­ரைப் பொலி­ஸார் விடு­வித்­து­விட்­ட­னர் என்று, காணா­மற்­போ­ன­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தரப்­பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

இதை­ய­டுத்து நேற்­றுக்­காலை சம்­ப­வம் தொடர்­பில் முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.சந்­தே­க­ந­ப­ரது என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் துவிச்­சக்­க­ர­வண்டி, கைப்பை, அலை­பேசி, கத்தி என்­பன போராட்ட இடத்­துக்கு அரு­கில் இருந்து மீட்­கப்­பட்­டி­ருந்­தன. அவை­யும் பொலி­ஸார் வசம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து மட்­டக்­க­ளப்­பைச் சொந்த இட­மா­கக் கொண்ட க.மகேந்­தி­ர­ராசா (வயது – 52) என்­ப­வ­ரைப் பொலி­ஸார் கைது செய்­த­னர்.

“சந்­தே­க­ந­பர் முல்­லைத்­தீவு தியோ­ந­கர் கடற்­க­ரை­யில் சிறிய கொட்­டில் ஒன்­றில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­டார். முன்­னுக்­குப் பின் முர­ணான தக­வல்­களை அவர் வழங்­கு­கி­றார். அவர் மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர் போன்று தெரி­கின்­றார்” என்று பொலி­ஸார் கூறு­கின்­ற­னர். அவர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்­றும் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 15 =

*