;
Athirady Tamil News

காஷ்மீரில் காணாமல் போன மேலும் ஒரு சிறுமி மர்ம மரணம்..!!

0

கஷ்மீரில் கத்துவாலில் கடந்த மாதம் மாயமான சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைக்கண்டித்து டெல்லியிலும் நாட்டின் மற்ற நகரங்களிலும் மெழுகு வர்த்தி ஏந்தி மக்கள் மவுன போராட்டங்கள் நடத்தினர்.

இந்தநிலையில் காஷ்மீரில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் இறந்தாள். ஜம்மு மாவட்டத்தில் சவுக்கி சவுல்ரா போலீஸ் நிலையத்தில் கடந்த 10-ந்தேதி தனது மகளை காணவில்லை என்று தந்தை புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 3 நாட்களாக தேடிவந்தனர். அப்போது வீட்டில் இருந்து 70 மீட்டர் தொலைவில் புதரில் சிறுமி பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாஹிஸ்திரேட்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. அதில் சாவுக்கான காரணம் தெரியவில்லை. இறந்த சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தந்தை கூறியுள்ளார். போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − four =

*