;
Athirady Tamil News

ஏழுமலையான் கைங்கர்யத்துக்கு தன்னையே ஒப்படைத்த தெய்வீக பசு..!! (வீடியோ)

0

திருமலைக்கு படி வழியே பாதயாத்திரை சென்று ஏழுமலையானை பசு தரிசித்தது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க பிரார்த்தனை செய்து, மலைக்கு படியேறி பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.

ஆனால், தீவிர பக்தர்களையெ மிஞ்சும் வகையில் ஒரு பசு மேற்கொண்ட பாதயாத்திரை அமைந்து விட்டது.ஏழுமலையானுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் நடைபாதை வழியே எத்தனை பேர் விரட்டினாலும் லட்சியம் செய்யாது மலையேறியது ஒரு பசு. மதியம் 2 மணிக்கு மலையேற துவங்கிய அந்த பசு, 5 மணிக்கு கலிகோபுரம் எனப்படும் மலை உச்சியை அடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து பசுவுக்கு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், திருமலை பசு மடத்துக்கு அழைத்துச்சென்று அங்கு சேர்த்தனர்.பசு பாதயாத்திரை மேற்கொண்டு, ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்ய தன்னையே ஒப்படைத்து அங்குள்ள கோசாலையில் ஐக்கியமானது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*