;
Athirady Tamil News

தீக்குளிக்க பெண்கள் முயற்சி: அமைச்சர் அதிர்ச்சி..!! (வீடியோ)

0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற 5 பெண்கள்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நாளை புமி பூஜை நடைபெறுவதால். நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் வருகிறார். அதற்க்காக வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டனர்.அப்போது மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த லெட்சுமி, ஆறுமுகத்தாய். காந்திமதி, ஈஸ்வரி, லெட்சுமி, ஆகிய ஐந்து பெண்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணென்னை கேனை எடுத்து அமைச்சர், மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்முன்பே தங்களது உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில், கவாத் திருப்பதி, குண்டுமணி, எஸ்.மணி, பிரேம், மற்றும் பாண்டி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், இவர்கள் கேரளாவிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். இவர்களை தேடி அங்கு சென்ற தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை என்ற பெயரில் அவர்களை ஆஸ்டன்பட்டி காவல் நிலைத்தில் வைத்து கவாத்து திருப்பதி மற்றும் குண்டு மணி ஆகியோரின் கால்களை உடைத்தாகவும், இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்த மற்றவர்களை பார்க்க அவர்களது உறவினர்களை அனுமதிக்க வில்லை என்றும் அனைவரையும் எண்கவுன்டரில் சுட்டுக்கொன்று விடுவோம் என்று போலீசார் மிரட்டியதாகவும் தெரிவித்த அவர்கள், வேறுவழியின்றி தீக்குளிக்க முயற்சித்ததாகவும் கூறினார்கள். பட்டப்பகலில் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அமைச்சர் ஆகியோரின் கண்முன்னே நடந்த இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 18 =

*