பாம்பன் பாலத்தில் பஸ் விபத்து..!! (படங்கள்)

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் தனியார் பஸ்சும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் இந்த விபத்தில் 12 பேர் லேசான காயத்துடன உயிர் தப்பினர்.ராமேஸ்வரத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், எதிரே கோயம்புத்தூரில் இருந்து ராமேஸ்வரத்தை நோக்கி வந்து அரசு பேருந்தும் பாம்பன் பாலம் பூங்கா அருகே மோதி விபத்துக்குள்ளானது.
ஓட்டுநர்களின் கவனக்குறைவால் இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் பயணிகள் 2 பேருக்கு பலத்த காயமும் 12 பேருக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
மேலும் காயம் அடைந்தவர்களை பாம்பன் போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.