;
Athirady Tamil News

வவுனியா செட்டிக்குளத்தில் முதற்கட்டமாக 73 வீடுகள்..!!

0

வவுனியா மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலகங்களின் கீழுள்ள பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் 900 குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 73 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான அடிக்கற்கள் 3 இடங்களில் நடப்பட்டுள்ளன.

கங்­கங்­கு­ளம், கிறிஸ்­த­வ­கு­ளம் மற்­றும் வவு­னியா பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட சிறி­ரா­ம­பு­ரம் போன்ற பகு­தி­க­ளி­லேயே அடிக்­கற்கள் நடப்­பட்­டன.

இது தொடர்­பில் வவு­னியா மாவட்ட வீட­மைப்பு அதி­கார சபை­யின் முகா­மை­யா­ளர் திரு­மதி பி.குரூஸ் தெரி­வித்­த­தா­வது:
கங்­கங்­கு­ளம் கிரா­மத்­தில் 30 வீடு­க­ளுக்கும் ,கிறிஸ்­தவ குளத்­தில் 15 வீடு­க­ளுக்கும் , சிறி­ரா­ம­பு­ரத்­தில் 28 வீடு­க­ளுக்­கும் அடிக்­கற்கள் நடப்­பட்­டன.

ஒவ்­வொரு வீடு­க­ளுக்­கும் தலா 5 இலட்­சம் ரூபா நிதி வழங்­கப்­ப­ட­வுள்­ளன. கடந்த ஆண்டு எமது சபை­யின் கீழ் மாதி­ரிக் கிரா­ம­மாக 40 கிரா­மங்­க­ளில் ஆயி­ரத்து 367 வீடு­கள் அமைத்­துக் கொடுக்­கப்­பட்­டன.

இந்­த­முறை எமது மாவட்­டத்­துக்கு 40 மாதி­ரிக் கிரா­மங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. அதற்­காக 450 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 900 வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. சில­வே­ளை­க­ளில் இந்த எண்­ணிக்­கை­யில் மாற்­றம் ஏற்­ப­ட­லாம்.

இதற்­கான பய­னா­ளி­கள் தெரிவு பிர­தேச செய­ல­கங்­கள் மூல­மாக அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­க­ளால் இடம்­பெ­று­கின்­றது. 700 பேருக்கு ஒரு இலட்­சம் ரூபா மதிப்­பி­லான வீட­மைப்­புக்­க­டன் திட்­ட­மும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டவுள்­ளது. வவு­னி­யா­வில் 12 ஆயி­ரம் வீடு­களை அமைக்­க­வுள்­ளோம் – என்று முகா­மை­யா­ளர் தெரி­வித்­தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*