;
Athirady Tamil News

ஐபிஎல் 2018 – டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்..!!

0

ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து மும்பை அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. லெவிஸ் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவும் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்குவிக்க தவறினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் பந்துவீச்சில் டேனியல் கிறிஸ்டியன், ராகுல் தெவாட்டியா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி அணியின் வெற்றிக்கு 195 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி இலக்காக நிர்ணயித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − three =

*