இராணுவத்தினரால் அதிக வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை: இராணுவ தளபதி..!!

இராணுவத்தினரின் அமைதி காக்கும் பணிகளினால் இலங்கை அதிகளவான வருமானத்தை ஈட்டியுள்ளதாக, இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இலங்கை இராணுவத்தினர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இன்றுவரை மேற்கொண்ட அமைதி காக்கும் பணிகளின் மூலமாக, 161 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளனரெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தவகையில் குறித்த அமைதி காக்கும் பணிகளின் மூலம் மாதாந்தம் சுமார் 2.5 மில்லியன் டொலர்களை இராணுவத்தினர் நாட்டுக்கு ஈட்டித் தருவதாகவும் மகேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டிலுள்ள இலங்கை இராணுவத்தினரின் மூலமாக அதிகளவான வருமானத்தை நாடு தற்போது பெற்று வருகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.