;
Athirady Tamil News

கிளிநொச்சியில் இணைய வானொலி ஆரம்பிக்கப்பட்டது..!! (படங்கள்)

0

கிளிநொச்சியில் இன்று (14.04.2018) மழை எனும் இணைய வானொலி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் மழை எனும் பெயருடன் தனியார் இணைய வானொலி கலையகமானது இன்று மாலை 1.30 pm மணியளவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கதிர்வேலு செவ்வேல் மற்றும் கைத்தொழில் அமைச்சின் ஊடக செயலாளர் முருகேசு நடேசலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

பல்வேறு சமூக செயற்பாடுகள், சமூக செயற்திட்டங்களையும் உள்ளடக்கியவாறு தனது பயணத்தினை ஆரம்பிக்க இருக்கின்ற மழை வானொலி இன்று தனது அங்குரார்ப்பண நிகழ்வை கண்டிருக்கிறது.

தொடர்ந்தும் பல செயற்பாடுகளை செய்ய இருக்கின்றோம் என மழை வானொலி செயற்ப்பாட்டாளர் கூறியுள்ளார்.

இதில் சமூக ஆர்வலர்கள், மழை வானொலி நிர்வாகிகள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + one =

*