;
Athirady Tamil News

சித்திரை குஷியில் சோகம்: ஆழியாறு ஆற்றில் 4 பேர் பலி..!!

0

பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை ஆற்றுப்படுகை நீரில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் பலியானார்கள்.

கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் பயோமெட்ரிக் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் 10 பேர், தமிழ் புத்தாண்டு விடுமுறை கொண்டாட, பொள்ளாச்சியருகே உள்ள ஆழியார் அணைக்கு இன்று சுற்றுலா வந்தனர்.

அணை அருகே உள்ள பள்ளிவிலங்கால் பழைய ஆயக்கட்டு ஆற்றுப்படுகையில் குஷியாக குளித்தனர். அப்போது சுழலில் சிக்கிய ஸ்ரீஹரி, லோகேஸ்வரன், வெங்கடேஷ் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடினார்கள்.

அவர்களை காப்பாற்ற அணை நீரில் குதித்த அவினாசியைச் சேர்ந்த மோகன்குமாரும் சுழலில் சிக்கி அந்த 3 பேருடன் தானும் உயிரை விட்டார்.

நீரில் மூழ்கியவர்களின் உடல்களை கிராம பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

சம்பவ இடத்துக்கு ஆழியார் போலீசார் வந்து இறந்தவர்கள் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து விபரீதம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + nineteen =

*