தவறான முடிவெடுத்து முன்பள்ளி ஆசிரியர் உயிர்மாய்ப்பு..!!!

முன்பள்ளி ஆசிரியர் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கியபோது மீட்கப்பட்டபோதும், சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
முன்பள்ளிக்குச்சென்று அவரிடம் லீசிங் பணத்தைச் செலுத்து மாறு லீசிங் நிறுவனப் பிரதிநிதி கேட்டு, மறுநாள் மாலை வீட்டுக்கும் சென்று பணம் கேட்டுள்ள நிலையில், ஆசிரியர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
முள்பள்ளியில் வைத்து பணத்தைத் தருமாறு வற்புறுத்திக் கேட்டுள்ளதால் கௌரவக் குறைவாக அவர் உணர்ந்து வீட்டிலும் அது நீடித்ததால் இப்படித் தவறான முடிவை ஆசிரியர் எடுத்திருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இயக்கச்சியைச் சேர்ந்த சதீஸ்தரன் யசோதா (வயது – 25) என்பவரே உயிரிழந்தார். அவர் இரண்டரை வயதுப் பெண்குழந்தையின் தாய்.
லீசிங் அடிப்படையில் 50 ஆயிரம் ரூபா பணம் எடுத்திருந்தார். இன்னும் 8 ஆயிரம் ரூபா மாத்திரமே செலுத்த வேண்டியிருந்தது. அவ்வாறிருக்கையில் பணத்தைச் செலுத்துமாறு குறித்த நிதி நிறுவனத்தின் பிரதிநிதி முன்பள்ளிக்குச் சென்று கேட்டுள்ளார்.
மறுநாள் அவரது வீட்டுக்கும் சென்று கேட்டுள்ளார். அதனைச் செலுத்த அவரிடம் பணம் இருக்கவில்லை. கணவனிடமும் அந்த நேரம் பணம் இருக்கவில்லை. அதனால் அவர் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கியுள்ளார்.
அவரது வீட்டில் குறித்த நிதிநிறுவனப் பிரதிநிதி சென்றதனை அவதானித்த அயல்வீட்டார் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் தூக்கில் தொங்கியபடி துடித்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றது. உடனடியாக அவரை மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமைனைக்கு மாற்றப்பட்டார். சீராகக் கதைக்க முடியாது கதைத்து வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.